நீதிபதிகளையும் வசைபாடுவது தி.மு.க.,வின் வேலை: காடேஸ்வரா

திருப்பூர் : ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
பல்கலை துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத, தி.மு.க.,வினர், நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோரை ஜாதி ரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனர்.
இவர்கள் பிராமண சமுதாயத்தினர்; இது பிராமண கோர்ட் என்றும் வரையறையின்றி பேசி வருகின்றனர்.
கோர்ட் அமைப்பு என்பது ஜனநாயக நாட்டின் இறையாண்மையை காக்கும் இடம். எந்த பாரபட்சமும் இன்றி, நீதி வழங்கி சட்டத்தை பாதுகாக்கும் நீதிபதிகளை, ஜாதியைக் குறிப்பிட்டு விமர்சிப்பது சரியில்ல.
தி.மு.க., யார் மீது வழக்கு தொடர்ந்தாலும் சரி, வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.
சாதகமாக தீர்ப்பு வரும்போதெல்லாம் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுவதும்; எதிராக தீர்ப்பு வந்தால், தீர்ப்பளித்தவரை மோசமாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக்கி உள்ளனர்.
ஜனநாயகம், இறையாண்மை, பண்பாடு, -கலாசாரம் அனைத்தையும், அக்கட்சி தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறது.
குறிப்பிட்ட அந்த தீர்ப்பை, வேறு ஜாதிகளை சார்ந்த இரு நீதிபதிகள் வழங்கி இருந்தால், அவர்களிடம் ஜாதி பேச மாட்டார் கள்; ஆபாசம், தனிநபர் விமர்சனம் செய்து பேசி வைத்திருப்பர். தனிப்பட்ட முறையில் நீதிபதிகளை தாக்குவதும், தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதுதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன: பா.ஜ., கேள்வி
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்
-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
சர்வதேச சமூகத்துக்கு அவமானம்; ஐ.நா.,வில் பாகிஸ்தானை சாடிய இந்தியா!