மாதந்தோறும் மின் கணக்கீடு; அடுத்த ஆட்சி அதை செய்யும்

5


தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த விஷயத்தையும் செய்யாதது போல, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையையும் கொண்டு வரவில்லை. ஆட்சி முடிய 10 மாத காலம் உள்ளது. அதற்குள் அதை செய்யவில்லை என்றால், அடுத்து ஏற்படுத்தப்படும் ஆட்சி, அதை செய்யும். டாஸ்மாக் ஊழல் குறித்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இறுதி தீர்ப்பு வந்த பின்தான், வழக்கு எப்படி போகும் என சொல்ல முடியும்.

கல்விக்காக மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கேட்டு, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் உண்மையான அக்கறை எதுவும் கிடையாது. தேர்தலுக்காக இப்படியெல்லாம் செய்து கொண்டுள்ளனர். ரெய்டு நடத்தி, அதனால் பயத்தை ஏற்படுத்தி, யாரோடும் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமோ, நிர்ப்பந்தமோ எதுவும் பா.ஜ.,வுக்கு கிடையாது.



நயினார் நாகேந்திரன்,
தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement