எச்.சி.எல்.,-ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை : கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., டெக்னாலஜியுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எச்.சி.எல்., நிறுவனத்தின் பல்கலை உறவிற்கான துறையின் தலைவர் பிரசாத் பன்னீர்செல்வம் மற்றும் கல்லுாரியின் தலைவர் மோகன்ராம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
இதன்மூலம், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கல்லுாரியின் தலைவர் மோகன்ராம் தெரிவித்தார்.
எச்.சி.எல்., நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறை அதிகாரி இளங்கோ பரமசிவம், கல்லுாரியின் தொழில்துறை நல்லுறவிற்கான டீன் கண்ணன் நரசிம்மன், வளாக வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குனர் அருண் ஜெகநாதன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்