மூதாட்டியிடம் செயின் பறித்த ஆசாமி கைது

சேவூர்,: அவிநாசி, சேவூர் அருகே நட்டுக்கோட்டையன்புதுார் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி பூரணியம்மாள், 60. இவர் கோபி மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். 15ம் தேதி மாலை, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டூவீலரில் வந்து கடையில் பொருட்கள் வாங்குவது போல கடைக்குள் வந்து பூரணியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த இரண்டு சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினார்.

இது குறித்து அவர் சேவூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்து சென்ற ஆசாமியை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று நம்பியூர் ரோட்டில் பாப்பாங்குளம் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக வந்த பந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் மகன் பால் ஆன்டனிராஜ் 40, என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அந்நபர் பூரணியம்மாளிடம் செயினை பறித்து தப்பியது தெரிந்தது. இதனைய டுத்து பால் ஆன்டனிராஜை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

Advertisement