ஒன்றிணைந்த கட்டை கொம்பன், ஒற்றை கொம்பன் 'ஆட்டம்' துவங்கும் என்பதால் உள்ளூர் மக்கள் அச்சம்

பந்தலுார் : பந்தலுார் அருகே அய்யன்கொல்லி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் கட்டை கொம்பன் மற்றும் ஒற்றை கொம்பன் யானைகள் ஒன்றிணைந்து முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி நெடுஞ்சாலையை ஒட்டிய, செம்பக்கொல்லி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.
அதில், 'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அருகே உள்ள தேயிலை தோட்டம் மற்றும் புதர் பகுதியில், நீண்ட நாட்கள் பிரிந்திருந்த, கட்டை கொம்பன், ஒற்றை கொம்பன் யானைகள் ஒன்றாக முகாமிட்டுள்ளன. அதில், கட்டை கொம்பன் மனிதர்கள் அருகே சென்றாலும் சாந்தமாக செல்லும் குணத்தை கொண்டது. ஆனால், ஒற்றை கொம்பன் பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக காணப்படும் நிலையில், மனிதர்களை பார்த்தால் துரத்தும் குணம் கொண்டது. ஏற்கனவே குடியிருப்புகளை இடித்து, மனிதர்களை தாக்கியதால் வனத்துறையால் பிடித்து செல்லப்பட்டு வேறு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில், பல மாதங்களாக தனியாக உலா வந்த கட்டை கம்பன் உடன், தற்போது ஒற்றைக்கொம்பன் இணைந்துள்ளதால், வனத்துறையினர் மற்றும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரண்டு யானைகளும் அத்திச்சால் குடியிருப்பு பகுதிகள் வழியாக சாலைக்கு வந்து செல்கின்றன. இதேபோல், பெருங்கரை, ஏலியஸ் கடை, காபிக்காடு, சசக்ஸ் பகுதிகளிலும் யானைகள் முகாமிட்டு உள்ளதால், வனத்துறையினர் யானைகளையும் கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதிகளில் பல யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகனங்களில் வருபவர்கள் யானைகளை பார்த்து, வாகனங்களை நிறுத்த கூடாது. மேலும், சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்ட கூடாது,' என்றனர்.

மேலும்
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்