தானியங்கிமயமும், ஏ.ஐ.,யும் இணைந்தால் பின்னலாடை உற்பத்தித்திறன் மேம்பாடு கருத்தரங்கில் திட்டவட்டம்

திருப்பூர்: ''தானியங்கிமயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டும் இணைந்தால், திருப்பூர் உற்பத்தித்திறன் மேம்படும்'' என்று ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) ஆகியன சார்பில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. வரவேற்று பேசிய, சி.ஐ.ஐ., மாவட்ட தலைவர் மனோஜ் குமார் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை பின்னலாடை தொழிலில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விவரித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், ''திருப்பூர் தொழில் துறையினர் இயற்கையான நுண்ணறிவை பயன்படுத்தி, கடந்த 50 ஆண்டுகளாக 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறது.
அடுத்த 25 ஆண்டுகளில் திருப்பூர் வரலாறு காணாத வளர்ச்சியை பெறும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்ந்து செல்ல 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதாக இருக்கும் .
பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்க உடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. திருப்பூர் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகரும் காலகட்டத்தில் நாம் இத்தகைய தொழில்நுட்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
உயர்தர ஆடை உற்பத்தி
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன் பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு என்பது பின்னலாடை உற்பத்தியில் இடைநிலை மற்றும் கடைநிலையில் ஏற்படும் தவறுகளை தவிர்க்க உதவியாக இருக்கும். பிழைகள் ஏற்படாமல் ஆடைகளை வடிவமைக்க வசதியாகவும் இருக்கும்.
திறன் பெற்ற தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்கிறது தானியங்கிமயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டையும் பயன்படுத்தினால், திருப்பூர் உற்பத்தி திறன் மேம்படும்'' என்றார்.
'ஏரில் டெக்னாலஜி' நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் சேகர், 'ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்கள் மற்றும் செயல் விளக்கம் குறித்து பேசினார்.
நிர்வாகி அரவிந்த் ராமலிங்கம், செயற்கை நுண்ணறிவு குறித்த படக்காட்சிகளுடன் விளக்கினார். நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த் மேழிசெல்வன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடுத்தடுத்த முயற்சியால், திருப்பூர் பின்னலாடைத்தொழிலில், 'ஏஐ' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி, உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து, படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டது.
மேலும்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை