கோழிக்கறி கடையில் இருந்து பணம் திருட்டு

கோவை : கணபதி, நேருஜீ வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 42; அதே பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி கடையில் இருந்த பார்த்தசாரதி, தண்ணீர் பிடிப்பதற்காக அருகில் உள்ள தண்ணீர் குழாய்க்கு சென்றார்.

அப்போது, கடையில் ஆள் இல்லாததை கவனித்த மர்ம நபர் ஒருவர், கடைக்குள் புகுந்து, ரூ. 8000 பணத்தை திருடிச்சென்றார். பார்த்தசாரதி சரவணம்பட்டியில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் அருணன், 46. இவர் கடந்த 18ம் தனது வீட்டை பூட்டிவிட்டு, கணபதி மாநகரில் உள்ள அவரது மனைவியின் வீட்டுக்கு சென்றார். பின்னர், 20ம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்த போது, முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் வைத்திருந்த ரூ.2,000 திருட்டு போயிருந்தது.

சம்பவம் குறித்து அருணன் அளித்த புகாரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement