திருப்புகழ் சொற்பொழிவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், திருப்புகழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

பொள்ளாச்சி ஜோதிநகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், பன்னிரு திருமுறை பாராயணம் மற்றும் திருப்புகழ் சொற்பொழிவு நிகழ்ச்சி ஜோதிநகர் 'ஏ' காலனியில் நடந்தது.

அதில், கோவை கவுமாரா மடத்தின் குருகுல மாணவர் மதிராஜா, கார்த்திக் ஆகியோர் திருமுறை பாராயணம் மற்றும் திருப்புகழ் இசையுடன் பாராயணம் நடந்தது. தொடர்ந்து, திருப்புகழ் இசை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்ற செயலாளர் ரகுபதி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement