பைக் மோதி மூதாட்டி பலி

கிணத்துக்கடவு, : பொள்ளாச்சி, முள்ளுப்பாடி அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.

பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், முள்ளுப்பாடி அருகே ரோட்டோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது, டி.என். 38 சிகே 9873 என்ற பதிவு எண் கொண்ட பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அடையாளம் தெரியாத மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற பைக் ஓட்டுநர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுகின்றனர்.

தாமரைக்குளம் - கோவில்பாளையம் இடைப்பட்ட பகுதியில் விபத்து அபாயம் அதிகம் உள்ளதால், வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement