கார் மோதி முதியவர் பலி
குள்ளஞ்சாவடி : கார் மோதியதில் மொபட்டில் சென்ற முதியவர் இறந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், நடுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,69; அதே பகுதி, தெற்கு தெருவை சேர்ந்தவர் மாயவன், 60; நேற்று முன்தினம் வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றுவதற்காக இருவரும் மொபெட்டில் கடலுார்-விருத்தாசலம் மெயின் ரோட்டில் சென்றனர்.
ஆயிக்குப்பம் சந்திப்பு அருகே வந்த போது, எதிரில் வந்த கார் திடீரென மொபட் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மாயவன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Advertisement
Advertisement