சிதம்பரத்தில் ஜே.கே.ஆர்., டெக்ஸ் 5வது கிளை திறப்பு

சிதம்பரம் : சிதம்பரத்தில் ஜே.கே.ஆர்., டெக்ஸ் 5வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.

ஜே.கே.ஆர்., டெக்ஸ் நிறுவனம் பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய நகரங்களில் இயங்கி வருகிறது.

தற்போது, இதன் 5வது கிளை சிதம்பரம்-புவனகிரி பைபாஸ் சாலையில் அண்ணா குளம் அருகில், துவங்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

போத்தீஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் போத்திராஜ் தலைமை தாங்கினார். ஜே.கே.ஆர்., நிறுவன உரிமையாளர்கள் ரமேஷ்காந்தி, சுகுமார்காந்தி வரவேற்றனர். ஜே.கே.ஆர்., டெக்ஸ் நிறுவனர் ஜெயபால் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

விழாவில், கட்டட உரிமையாளர் ரஜினிகாந்த், இன்ஜினியர் வாசுதேவன், சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர், தொழிலதிபர்கள், வியாபாரிகள், முக்கியஸ்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

திறப்பு விழா சலுகையாக 5,000 ரூபாய்க்கு மேல் ஜவுளி எடுத்தவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள் பரிசாக வழங்கப் பட்டன.

Advertisement