பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

நடுவீரப்பட்டு : பண்ருட்டி நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் ரிப்லெக்ட் ஜாக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கண்ணன், சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேர்மன் ராஜேந்திரன், செந்தில் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, ரிப்லக்ட் ஜாக்கெட், கையுறை, தொப்பி ஆகியவைகளை வழங்கினர்.

Advertisement