பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்

புதுடில்லி: நடப்பு நிதியாண்டிற்கான பி.எப்., வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதனால் 7 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.

நாடு முழுதும் தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணி நிறைவில் பணப்பலன் உள்ளிட்டவை வழங்கும் வகையில், ஈ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுகிறது.


கடந்த 2021 - 22ம் ஆண்டுக்கான வட்டி விகிதம், 2022 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அப்போது 8.10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2023- 24ம் நிதியாண்டில், 8.15 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான பி.எப்., வட்டி விகிதத்தை மீண்டும் 8.25 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயத்துள்ளது. இதனால் 7 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள். இதன் வாயிலாக 7 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைவர். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை விரைவில் வரவு வைக்கப்படும்.

Advertisement