துபாய்க்கு வேலைக்கு அனுப்பி புரோட்டா மாஸ்டரிடம் மோசடி; ஒருவர் கைது

மதுரை: சுற்றுலா விசாவில் துபாய்க்கு வேலைக்கு அனுப்பி புரோட்டா மாஸ்டரின் 4 மாத சம்பளத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆத்திகுளம் கனகவேல் நகரை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பாண்டியராஜன், 32. இவர் துபாய்க்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறியதை நம்பி, மதுரை சிம்மக்கல் பகுதி ஹோட்டல் ஒன்றின் உணவு மாஸ்டர் மரியதாஸ் என்பவர் ரூ.50,000 பாண்டியராஜனிடம் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, துபாய்க்கு உணவு விடுதி வேலைக்குச் சென்ற மரியதாஸ் இரண்டு மாதங்கள் வேலை செய்த நிலையில், அவருடைய விசா 60 நாட்களுக்கான சுற்றுலாவுக்கு உரியது என தெரியவந்தது. தவிர 2 மாத சம்பளத்தை மரியதாசுக்கு வழங்காமல் பாண்டியராஜனுக்கு ஹோட்டல் நிர்வாகம் அனுப்பியது.
இதுகுறித்து பாண்டியராஜனிடம் மரியதாஸ் வாக்குவாதம் செய்த நிலையில், மற்றொரு உணவு விடுதியில் பணியில் சேர்ந்து நிலைமையை சமாளித்த பாண்டியராஜன், அங்கிருந்து 2 மாத சம்பளத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் குடும்பத்தினர் அனுப்பிய பணத்தை வைத்து இந்திய தூதரகம் மூலம் ஊர் திரும்பி, போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி, இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். மரியதாசின் சம்பளமான மொத்தம் ரூ. 3. 50 லட்சத்தை பெற்று பாண்டியராஜன் மோசடி செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
மேலும்
-
பொன்னப்ப நாடார் பேரன் என்பதா? ராஜேஷ்குமாருக்கு எதிராக கொந்தளிப்பு
-
டில்லிக்கு போகாத ரங்கசாமி கூட்டணி கசப்பு காரணமா?
-
தலைவனாக செயல்படுவேன் பா.ம.க., அன்புமணி உறுதி
-
கட்டாய கல்வி உரிமை முடக்கமா? வைகோ ஆவேசம்
-
சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சரி செய்வாரா முதல்வர்: பா.ஜ.,
-
'செமிகண்டக்டர்' தொழிற்சாலை தவறவிட்டது தமிழகம்: பன்னீர்