கட்டாய கல்வி உரிமை முடக்கமா? வைகோ ஆவேசம்
சென்னை: தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை முடக்க, மத்திய அரசு முயற்சிப்பதாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
'புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான, மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், தமிழகம் கையெழுத்திடவில்லை.
எனவே, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் படிக்கும் 25 சதவீத மாணவர்களுக்கான, மத்திய அரசின் பங்களிப்பு தொகை ஒதுக்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'புதிய கல்விக் கொள்கையை ஏற்காத, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்திருந்தது.
ஆனாலும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை. கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.
இச்சூழலில், தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை முடக்கி வைக்கும் வகையில், இத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை விடுவிக்காமல், அடாவடியாக மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு