டில்லிக்கு போகாத ரங்கசாமி கூட்டணி கசப்பு காரணமா?
புதுச்சேரி: பிரதமர் மோடி தலைமையிலான நிடி ஆயோக்கின் ஒன்பதாவது நிர்வாகக் குழு கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட 20 மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், கவர்னர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'வரும் 2047ம் ஆண்டு 'விக்சித் பாரதம்' என்ற தொலைநோக்கு பார்வையை அடைய அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு தேவை' என, பிரதமர் வலியுறுத்தினார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பங்கேற்காமல், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்திருப்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
கவர்னர் - முதல்வர் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதனால், புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சரிடம், கவர்னரை மாற்ற முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், பா.ஜ., அரசு அதை ஏற்கவில்லை.
அதோடு, அரசின் கோப்புகள், கவர்னரின் ஒப்புதல் கிடைக்காமல் தேங்கி கிடக்கின்றன. இவற்றால், பா.ஜ., தலைமை மீது ரங்கசாமிக்கு வருத்தம் உள்ளது.
அதன் காரணமாகவே முதல்வர் ரங்கசாமி, 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இது, தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் உள்ளதை, அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
ஆனால், ஆளுங்கட்சி தரப்பினரோ, 'முதல்வர் வழக்கமாகவே டில்லி செல்வதை தவிர்ப்பார். அதனாலேயே, நிடி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை. பா.ஜ., தலைமையுடன் முதல்வருக்கு சுமுக உறவு உள்ளது. அதனால், கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை' என்றனர்.
மேலும்
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்