தோழியுடன் 12 ஆண்டு காதல் : பகிர்ந்தார் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்

புதுடில்லி:ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தோழி அனுஷ்கா யாதவுடனான தனது நீண்டகால உறவை அறிவிக்கும் வகையில் ஒரு பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
பீஹார் முன்னாள் முதல்வரும் ஆர்.ஜே.டி., தலைவருமான லாலுவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை, மே 2018 இல் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் மற்றும் தேஜ் பிராதப் இருவரிடையே திருமண உறவில் பிரச்னையால், விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் மாலத்தீவில் நேரத்தைச் செலவிடுகிறார். அவர் சமூக ஊடக கணக்கில் கடற்கரையில் தியானம் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக்கில் தேஜ் பிரதாப் பதிவிட்டுள்ளதாவது:
நான் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன், இந்தப் புகைப்படத்தில் என்னுடன் காணப்படுபவர் அனுஷ்கா யாதவ், நாங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம், காதலிக்கிறோம்.
இதை உங்கள் அனைவருடனும் நீண்ட காலமாகப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன், ஆனால் அதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.எனவே இன்று, இந்தப் பதிவின் மூலம், என் மனதில் உள்ளதை உங்கள் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு தேஜ் பிரதாப் அந்த பதிவில் கூறியுள்ளார்.

மேலும்
-
மரத்தின் கீழே துாங்கியவர் மீது சேற்றை கொட்டியதால் உயிரிழப்பு
-
பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்
-
எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
-
பத்திரிகையாளருக்கு எதிரான அவதுாறு வழக்கிற்கு தடை
-
பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தல்
-
பொன்னப்ப நாடார் பேரன் என்பதா? ராஜேஷ்குமாருக்கு எதிராக கொந்தளிப்பு