எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

1

பானஸ்கந்தா: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தின் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தடுப்பு வேலியை தாண்டி, நம் எல்லைக்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றார்.

இதைப்பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர், அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதை மீறி, நம் எல்லைக்குள் அந்த நபர் நுழைய முயன்றார். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விசாரணையில், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Advertisement