பத்திரிகையாளருக்கு எதிரான அவதுாறு வழக்கிற்கு தடை

புதுடில்லி: 'இந்தியா டுடே' டிவியில், கடந்தாண்டு பீஹாரில் நிலவிய அரசியல் சூழல் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி உள்ளிட்டோர் குறித்து பல்வேறு கருத்துகள் அதில் பேசப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அவதுாறு கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறி, இந்தியா டுடேவின் ஆசிரியர் அருண் பூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மனை ரத்து செய்ய வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'அருண் பூரிக்கு எதிரான அவதுாறு வழக்கு தொடர்பாக, பீஹார் உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.

'மறு உத்தரவு வரும் வரை இந்த அவதுாறு வழக்கு தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement