மரத்தின் கீழே துாங்கியவர் மீது சேற்றை கொட்டியதால் உயிரிழப்பு
பரேலி: உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷாந்திபூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் பிரஜாபதி, 45. காய்கறி வியாபாரியான இவரது வீட்டின் அருகே சுடுகாடு உள்ளது.
கடந்த 22ம் தேதி மதிய நேரத்தில், மது போதையில், சுடுகாட்டில் உள்ள மரத்தின் அடியில் சுனில் குமார் பிரஜாபதி துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, சேறு நிரப்பப்பட்ட டிராக்டருடன் அங்கு வந்த துாய்மைப் பணியாளர்கள், சுனில் குமார் பிரஜாபதி துாங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல், அவர் மீது சேற்றை முழுதுமாக கொட்டிவிட்டு சென்றனர். சில மணி நேரங்கள் கழித்து, சுனில் குமார் பிரஜாபதியை தேடி, அவரது மகன் அங்கு வந்தார்.
சேற்றுக்குள் தந்தை புதைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், உள்ளூர் மக்கள் உதவியுடன் அவரை சேற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில், சுனில் குமார் பிரஜாபதி அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு