பிரீமியர் லீக் கிரிக்கெட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி

ஜெய்ப்பூர்: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நடந்து வரும் 66-வது லீக் போட்டியில் டில்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற டில்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியில் தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா 6 ரன்கள் எடுத்திருந்த போது முஷ்தபிஷூர் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து, பிரப்சிம்ரன் சிங் மற்றும் இங்லிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்து இங்லிஸூம், பிரப்சிம்ரன் சிங் 28 ரன்னிலும் அவுட்டாகினர். வதேரா 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுக்களும் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 33 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் 53 ரன்களில் அவுட்டானார். ஒமர்ஷாய் (1), ஜான்சென் (0) ஏமாற்றம் அளித்தாலும், ஸ்டொய்னிஸ் சிக்சரும், பவுண்டரியுமாக பறக்க விட்டார்.
இதனால், பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஸ்டொய்னிஸ் 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
207 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய டில்லி அணியில் கே.எல். ராகுல், 35 ரன்களில் அவுட்டனார். பிளஸ்சி 23 ரன்களில் அவுட்டானார், இரண்டாவது விக்கெட்டாக கே.கே.நாயர் 44 ரன்களில் அவுட்டானார். தொட்ந்த சமீர் ரிஸ்வி 51 ரன்களிலும், அதால் 22 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் 19. 3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி பெற்றது.
மேலும்
-
மத்திய அரசை விலக்கி, பகைத்து நிற்க முடியாது ஸ்டாலினுக்கு திருமாவளவன் 'புல் சப்போர்ட்'
-
குவாரிகளை மூடாவிட்டால் போராட்டம்
-
வீராவேசமாக பேசிய சூராதி சூரர் எங்கே?
-
கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று பயம் கூட்டுறவு சங்க தேர்தல் இப்போதைக்கு இல்லை
-
சிதம்பரம் சான்றளிக்கும் பா.ஜ., வளர்ச்சி கேசவவிநாயகன்
-
சிந்தனைக்களம்: மத்திய பட்டியலா - மாநில பட்டியலா எது சரி