சிதம்பரம் சான்றளிக்கும் பா.ஜ., வளர்ச்சி கேசவவிநாயகன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைத்து, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் பேசியதாவது:

தமிழகத்தில் பா.ஜ., எங்கே இருக்கிறது என ஒரு காலத்தில் கேட்டனர். தற்போது பா.ஜ.,வின் அசுர வளர்ச்சி கண்டு, பலரும் ஆடிப்போய் உள்ளனர். பா.ஜ., வளர்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமே சான்றளித்துள்ளார்.

வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு கூடுதல் எண்ணிக்கையில், பா.ஜ., சார்பில் போட்டியிட வேண்டும். அதற்கேற்ப கட்சியினர் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement