சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவருக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இதே போன்று, ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில், கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர் கோவில், விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவில், திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில்,மயிலம் அடுத்த கொல்லியங்குணம் நீலகண்டேஸ்வர் கோவில், மயிலம் சுந்தர விநாயகர் கோவில், பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், செண்டூர் கோவில்களில் மூலவர் மற்றும் நந்தி பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement