கிறிஸ்துவ வன்னியருக்கு எம்.பி.சி., எதிர்த்த ஹிந்து அமைப்பினர் கைது

திண்டுக்கல் : ஹிந்து வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.சி., உரிமையை கிறிஸ்துவ வன்னியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல்லில் நடந்த கிறிஸ்துவ வன்னியர் இட ஒதுக்கீடு மாநில மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி, ஹிந்து மகா சபா நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் நேற்று நடந்த மாநாடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும், இது மதம் மாற்றும் ஒரு முயற்சி எனக்கூறி, ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி, அகில இந்திய ஹிந்து மகா சபா அமைப்பினர், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகனை, திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
அவரை விடுவிக்க வலியுறுத்தி, அக்கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல்- - பழநி சாலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.










மேலும்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்