'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

புதுடில்லி: ''நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசினார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மற்ற மாநில முதல்வர்கள் உட்பட அனைவருமே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேசினர்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமே தமிழில் பேசினார். இது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் முதல்வர் பேசத் துவங்கியதும், மொழி பெயர்ப்பு வசதி எங்கே என்று பலரும் தேடியதை காண முடிந்தது.
அதற்கு ஏற்ப, முன்கூட்டியே மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டிருந்த தால், முதல்வரின் பேச்சை அனைவரும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சரியாக மதியம் 2:42 மணிக்கு துவங்கிய முதல்வரின் உரை, 7 நிமிடங்க ளுக்கு நீடித்தது.
அனைவருக்குமே இந்த அளவு மட்டும்தான் நேரம் என்பதால், முதல்வர் மள மளவென வாசித்து முடித்து விட்டார். உள்ளரங்கிற்குள் தலைமை செயலர் முருகானந்தம் மட்டுமே, முதல்வருக்கு உதவியாக இருந்தார். பத்திரிகையாளர்கள் உட்பட மற்ற யாருக்கும் அனுமதி இல்லை










மேலும்
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்