கடிதம் எழுதும் முகாம் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை, :'மெட்ராஸ் போஸ்ட் கிராசிங் கம்யூன்' மற்றும் 'போஸ்டலி ஹட்' ஆகிய அமைப்புகள் சேர்ந்து, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்காவில், கோடைகால கடிதம் எழுதும் முகாம் நடத்துகின்றன.
தபால் குறித்த அறிமுகம், தபால் அட்டையில் கடிதம் எழுதுவது, தபால் தலைகளின் சிறப்பு, சிறப்பு தபால் உறைகள் மற்றும் கலைநயத்துடன் தபால் அட்டை தயாரிப்பது போன்ற தலைப்புகளில் முகாம் நடைபெறுகிறது. இதில், 6 முதல் 80 வயதுள்ளவர்கள் பங்கேற்றனர்.
'மெட்ராஸ் போஸ்ட் கிராசிங் கம்யூன்' அமைப்பின் பொறுப்பாளர் ஜெய்சக்திவேல் கூறியதாவது:
கடிதம் எழுத ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, 2019ம் ஆண்டு, இந்த அமைப்பை துவங்கினோம்.
மாதம்தோறும் பூங்கா, மைதானம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி விவாதிக்கிறோம்.
புகைப்படத்துடன் கூடிய தபால் அட்டை அனுப்புவதை பலர் விரும்புகின்றனர். பொதுவாக, தபால் நிலையங்களில் வட்ட வடிவிலாக முத்திரை குத்தப்படும்.
சென்னையில், நான்கு இடங்களில் 'நிரந்தர பட முத்திரை' பதித்து அனுப்பும் இடங்கள் உள்ளன. அங்கு சென்று தபாலில் முத்திரை குத்துவதை ஊக்கப்படுத்துகிறோம்.
அதேபோல், உலக மக்களை கடிதம் வாயிலாக ஒருங்கிணைக்கும், 'போஸ்ட்கிராசிங்' செயல்பாடுகள் குறித்து பகிர்கிறோம்.
கடிதம் எழுதுவது, தபால் தலை, உறை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர்கள், 98413 66086 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
-
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
-
நீலகிரி, குமரியில் வெளுத்து வாங்கிய மழை: மரங்கள் முறிவு; சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு
-
நாணயம் என்பது பணம் மட்டும் இல்லை... அது ஒரு வரலாறு!
-
வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை
-
காயங்களுடன் இறந்து கிடந்த டிரைவர்