காயங்களுடன் இறந்து கிடந்த டிரைவர்

நரிக்குடி : நரிக்குடி கணையமரித்தானை சேர்ந்த கணேசன் 45. மானாமதுரை அருகே செங்கல் சூளையில் டிரைவராக வேலை பார்த்தார்.

நேற்று முன்தினம் தேளியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கலை நிகழ்ச்சியை காண சென்றவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை தேளி நிழற்குடையில் கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement