வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை

சென்னை: 'ஆன்லைனில்' வர்த்தகம் செய்தால், அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுதும் மோசடி கும்பல், 'யு.பி.ஐ., கேஷ்பேக், டிஜிட்டல் அரஸ்ட்' என, பல்வேறு வகைகளில், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது.
மோசடி புகார்கள் குறித்து, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். எனினும், குறைந்த பணம் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் பார்க்கலாம் என, ஆசையை துாண்டும், மோசடி கும்பலிடம் சிக்கி, பணத்தை இழப்போர் அதிகரித்து வருகின்றனர்.
பல மடங்கு லாபம்
இதுகுறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியதாவது:
'ஆன்லைன்' செயலி யில், பணம் முதலீடு செய்தால், 10 மடங்கு லாபம் கிடைக்கிறது என, வாட்ஸாப் மற்றும் டெலிகிராம் செயலி வாயிலாக விளம்பரங்கள் வருகின்றன. இந்த மோசடி கும்பல், பிரபல நிறுவனங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்துகிறது.
பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி, அதன் பங்குகளை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினேன். தற்போது பல மடங்கு லாபம் கிடைத்துள்ளது. பங்குகளை வாங்கி லாபம் சம்பாதிக்கும் எளிய வழிகளை கற்றுத் தருகிறோம் எனக்கூறி, மக்களை நம்ப வைக்கின்றனர்.
மக்களும் பிரபலமான நிறுவனத்தின் பெயரை கூறுவதால், முதலீடு செய்ய விரும்பி, மோசடி கும்பல் சொல்லும் வழியில் பணத்தை அனுப்புகின்றனர். துவக்கத்தில் லாபம் கிடைப்பது போல செய்கின்றனர்.
ஏமாற வேண்டாம்
கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிக பணத்தை முதலீடு செய்யும்போது, பணத்துடன் கம்பி நீட்டி விடுகின்றனர். பணத்தை இழந்தவர்களால், மீண்டும் அதை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த மோசடியில் ஈடுபடுவோர், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருப்பதால், அவர்களை கண்டுபிடிப்பது எளிதல்ல. எனவே, குறைந்த முதலீட்டில், அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



மேலும்
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்