பக்தர்களுக்காக பேட்டரி வாகனம்

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்களில், பக்தர்கள் பயன்பெறுவதற்காக கரூர் வைஸ்யா வங்கி, தன் சமூக பொறுப்பு நிதி 17.91 லட்சம் ரூபாயில் மூன்று 'பேட்டரி' கார்களை வழங்கி உள்ளது.

இதற்கான நிகழ்ச்சி, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கரூர் வைஸ்யா வங்கி சென்னை கோட்ட மேலாளர் ஜனார்த்தனன், வங்கி அரசு வணிகங்களின் தலைவர் ஜனனி சீனிவாசன், கோட்ட செயலாக்க அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement