இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை

லடேஹர்: ஜார்க்கண்டின் லடேஹர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன், ஜார்க்கண்ட் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் டி.ஐ.ஜி., ரமேஷ் கூறியதாவது:
என்கவுன்டரில் பலியானவர்களில் ஒருவர், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் என்ற நக்சல் அமைப்பின் தலைவன் பப்பு லோஹ்ரா என தெரிய வந்துள்ளது. இவரது தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
பலியான மற்றொருவர், அவரது கூட்டாளி என்றும், அவரது பெயர் பிரபாத் லோஹ்ரா என்பதும், அவரும் நக்சல் அமைப்பை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
விருதுநகர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தேவை ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில்; வெயிட்டிங் லிஸ்ட்டால் தவிக்கும் பயணிகள் எதிர்பார்ப்பு
-
நீலகிரி, ஊட்டியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்