விவசாயிகள் உதவித்தொகை பதிவு செய்ய 31 கடைசி நாள்
ராசிபுரம்:'விவசாயிகள் கவுரவ நிதி பெறுவதற்கு பதிவு செய்ய, மே, 31 கடைசி நாள் என, ராசிபுரம் வேளாண் உதவி இயக்குனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய விவசாயிகள், 20வது தவணை தொகை, 2,000 ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்களை சரிசெய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மே, 31 வரை சிறப்பு முகாம் நடக்கிறது. சிறப்பு முகாம்கள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், அஞ்சல் அலுவலகங்கள், பொது சேவை மையங்களில் நடக்கிறது.
நில உடமை பதிவேற்றம், இ-கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி பயன்பெறலாம். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளையோ அல்லது அஞ்சல் அலுவலகங்களில் புதிதாக வங்கி கணக்கு துவங்கியோ பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நீலகிரி, ஊட்டியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்