விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை சுத்தப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இங்கு நடைபெறும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், வட்ட சில்லு, சூது பவள மணி, தங்க மணி உள்ளிட்ட 5003 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுடு மண்ணால் ஆன முழுமையான பானைகள், உடைந்த பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்நிலையில் இங்கு அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் பானை ஓடுகளை பிரித்து சுத்தப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், இங்கு முன்னோர்கள் தொழிற்கூடம் நடத்தியதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளது. அதன்படி பானைகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை சுத்தப்படுத்தி அதில் ஏதேனும் குறியீடுகள், எழுத்து உள்ளதா என ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் முன்னோர்களின் காலத்தை துல்லியமாக கண்டறியலாம், என்றார்.
மேலும்
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?