காஸ் கசிந்து சிலிண்டரில் தீ


வெண்ணந்துார் :வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மூன்றாண்டுக்கு ஒருமுறை குலதெய்வம் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு குலதெய்வ வழிபாடு, அத்தனுார் அம்மன் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், நேற்று மாலை முதல் தளத்தில் உறவினர்களுக்கு விருந்து வைக்க, சமையல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, சிலிண்டர் டியூபில் காஸ் கசிந்து தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதையடுத்து, ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், சிலிண்டரில் காஸ் தீர்ந்ததால் தானாகவே தீ அணைந்து, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement