மேட்டூர் கிழக்கு கரை பாசன வாய்க்கால் துார்வாரும் பணி

பள்ளிப்பாளையம் :மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால், குமாரபாளையம் தாலுகா பகுதியில் களியனுார், சமயசங்கிலி, எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சின்னார்பாளையம், தெற்குபாளையம் உள்ளிட்ட, 25 கி.மீ,, சுற்றளவுக்கு செல்கிறது. ஆண்டுதோறும் ஆக.,ல் பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறப்பது வழக்கம்.


வாய்க்காலின் பல இடங்களில் முட்புதர் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக, சிறப்பு துார்வாரும் திட்டத்தின் கீழ், குமார
பாளையம் தாலுகா பகுதியில் செல்லும் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலின்
பிரதான மற்றும் கிளை வாய்க்கால், 24.95 கி.மீ துாரத்திற்கு, 38 லட்சம் ரூபாயில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை, சென்னை திட்ட
உருவாக்கம் இணை தலைமை பொறியாளர் குமரன், நேற்று ஆய்வு செய்தார்.

Advertisement