டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி



பள்ளிப்பாளையம் பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 25; இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று ஈரோட்டில் நடக்கும் தன் நண்பர் திருமணத்திற்கு சென்றார். காலை, 10:00 மணிக்கு, மொளசி அடுத்த முனியப்பன்பாளையம்

பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement