தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய வாலிபர் சாவு



ஓசூர் :கர்நாடகா மாநிலம், வடக்கு பெங்களூரு நேருபுரம் பிராட்ஷா தெருவை சேர்ந்தவர் முகமது அதிபுதீன், 22. கடந்த, 22ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, ஓசூர் அருகே நாயனகொண்ட அக்ரஹாரம் பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றில், முகமது அதிபுதீன் தன் நண்பர்கள், உறவினர்களுடன் குளித்தார்.


அப்போது, ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், நீரில் அடித்து செல்லப்பட்டார். ஓசூர் தீயணைப்புத்துறையினர், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்ததால், நேற்று முன்தினம் மீண்டும் தேடினர். அப்போது, மாலையில் முகமது அதிபுதீன் சடலம் மீட்கப்பட்டது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement