ஏரியில் மண், கல் கடத்தல் 3 லாரி, பொக்லைன் பறிமுதல்

கிருஷ்ணகிரி :புளியம்பட்டி வி.ஏ.ஓ., கவுரிசங்கர் தலைமையிலான அதிகாரிகள், பாரூர் அருகே பாப்பாரப்பட்டி கொட்டாவூர் ஏரி அருகே ரோந்து சென்றனர். அங்கு நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. கவுரிசங்கர் புகார் படி, பாரூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி தலைமையில் அதிகாரிகள் ஜிஞ்சுப்பள்ளியில்

ரோந்து சென்றனர். அங்கு நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, குருபரப்பள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

* போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துார், கொட்டாவூர் ஏரியில் நேற்று முன்தினம் மாலை போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா சோதனை நடத்தினார். அங்கு அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, பாரூர் போலீசில் ஒப்படைத்தார். புளியம்பட்டி வி.ஏ.ஓ., கவுரிசங்கர் புகார் படி, பாரூர் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள வாகன உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement