கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ., பள்ளி 10, 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியர், 10 மற்றும், 12ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024 - 2025ம் கல்வி ஆண்டின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான, 10 மற்றும், 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில், கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியின், 10 மற்றும், 12ம் வகுப்பு மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதில், 12ம் வகுப்பு தேர்வில், மாணவி தர்ஷிகா, 500க்கு, 481 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்தார். 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ப்ரிணிதா, 492 மதிப்பெண்கள் பெற்று, கிருஷ்ணகிரி வட்டார அளவில் முதலிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்தார். பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மாணவியருக்கு, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில், மாணவர்களுக்கு, மடிக்கணினி மற்றும் டேப் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர் புவியரசன் மற்றும் பள்ளியின் கல்வி இயக்குனர், முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement