மக்களை தேடி முகாம்



ஈரோடு, :ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட வீரப்பன் சத்திரம் அலுவலகத்தில், மக்களை தேடி சிறப்பு முகாம் நடந்தது.


மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், சொத்து வரி பெயர் மாற்ற ஆணைகளை வழங்கினர். முகாமில், ௧௭ மற்றும் ௨௩வது வார்டு மக்களிடம் இருந்து, சொத்து வரி, பெயர் மாற்றம், காலியிட வரிவிதிப்பு, புதிய சொத்து வரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு உடனடி ஆணை வழங்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement