வினாடிக்கு 364 கன அடி தமிழகத்திற்கு நீர்வரத்து

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து காணப்பட்டது. இதனால், தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.
ஆந்திராவின் கண்டலேறு அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 2,500 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் சாய்கங்கை கால்வாய் வாயிலாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு, துவக்கத்தில் வினாடிக்கு, 50 கன அடி வீதம் வந்தது. தற்போது, 364 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி நிலவரம்
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 300 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி.,யில், 1.4 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டமான, 35 அடியில், 28.46 அடி நீர் உள்ளது.
மேலும்
-
நீலகிரி, ஊட்டியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்