துப்பாக்கி விற்ற ரவுடி கைது

கே.ஜி.ஹள்ளி: பெங்களூரின் கே.ஜி.ஹள்ளியில் வசிப்பவர் சமீர், 28. ரவுடி பட்டியலில் உள்ள இவர், அவ்வப்போது டில்லி சென்று, குறைந்த விலைக்கு நாட்டு துப்பாக்கிகள் வாங்கி வந்து, பெங்களூரில் அதிக விலைக்கு விற்று வந்தார். ரவுடிகளுக்கும் கூட, துப்பாக்கி விற்றுள்ளார்.

இதுபற்றி அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று மதியம், ரவுடி சமீரின் வீட்டில் சோதனை நடத்தி, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டில்லியில் யாரிடம் இருந்து, துப்பாக்கி வாங்கினார்; பெங்களூரில் யார், யாருக்கு விற்றார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement