குறையுது துவரை, உளுந்தம் பருப்பு, வத்தல் விலை
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 10,300 முதல் ரூ. 10,500, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 1100 குறைந்து ரூ. 9800, வத்தல் நாடு புதுசு 100 கிலோவிற்கு ரூ. 500 குறைந்து ரூ. 7,500 முதல் ரூ. 10,000 என விற்கப்படுகிறது.
இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2500, ந.எண்ணெய் ரூ. 5775, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ. 70 குறைந்து ரூ. 1930, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 10 குறைந்து ரூ. 2210, மைதா 90 கிலோ ரூ. 4590, ரவை 30 கிலோ ரூ. 1520, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 6450, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 4400 என விற்கப்படுகிறது.
பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 9200 முதல் ரூ. 9350, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 9000, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 8200 முதல் ரூ. 8300, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 7300 முதல் ரூ. 7400, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 4600, பாசிப்பயறு லயன் மீடியம் ரூ. 6700 முதல் ரூ. 6,900 என விற்பனை செய்யப்படுகிறது.
மல்லி லயன் 40 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 3350 முதல் ரூ. 3450, மல்லி நாடு ரூ. 3500 முதல் ரூ. 4300, முண்டு வத்தல் 100 கிலோ ரூ. 8,000 முதல் ரூ. 14,000, குண்டூர் வத்தல் ரூ. 11,000 முதல் ரூ. 13,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 4000, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1800 என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்
-
தாய்க்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்த குழந்தை பலி
-
'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
-
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
-
நீலகிரி, குமரியில் வெளுத்து வாங்கிய மழை: மரங்கள் முறிவு; சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு
-
நாணயம் என்பது பணம் மட்டும் இல்லை... அது ஒரு வரலாறு!