சின்னசேலம் சிறுவன் உட்பட 2 பேர் ஏரியில் மூழ்கி பலி

கெங்கவல்லி:சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த ஷாஜகான் மகன் சமீர், 15; ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவரது உறவினரான, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை சேர்ந்த சர்புதீன் மகன் ரியாஷ், 13; எட்டாம் வகுப்பு மாணவர்.

பள்ளி விடுமுறையால் சமீர் வீட்டுக்கு வந்துள்ளார். ரியாஷ், சமீர் உட்பட அப்பகுதி சிறுவர்கள், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் நேற்று குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற சமீர், ரியாஷ் மூழ்கினர்.

மற்ற சிறுவர்கள் கூச்சலிட அங்கிருந்தவர்கள், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement