கோயில் யானைக்கு 23வது பிறந்த நாள்

திருச்சி:திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு 23வது பிறந்த நாள் விழாவை கொண்டாடப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, திருவானைக்காவல் கோயில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக அகிலா கொண்டு வரப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று, கோயில் யானை அகிலாவுக்கு 23வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கோயில் யானை அகிலாவுக்கு, நந்தவனத்தில் பூஜை செய்து கற்பூர ஆரத்தி எடுத்தனர்.

தொடர்ந்து, யானை பாகன்கள், அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் அகிலாவுக்கு பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துப் பாடினர். கோயில் யானை அகிலா தலையை அசைத்து, தும்பிக்கையை துாக்கி பிளிறி வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டதை பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement