கம்பம் வரும் கேரள எம்.எல்.ஏ.,வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

கூடலுார்:தேனிமாவட்டம் கம்பத்தில் நாளை நடைபெறும் நுால் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வரும் கேரளா பீர்மேடு இந்திய கம்யூ., எம்.எல்.ஏ., விற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கம்பம் தடம் நுால் வெளியீட்டு களம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நாளை (மே 26) கம்பத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பீர்மேடு எம்.எல்.ஏ., வாழூர் சோமன் வர உள்ளார். இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறும் போது:
இடுக்கி மாவட்டத்தில் 3.5 லட்சம் தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம், போனஸ் உள்ளிட்ட உரிமைகளுக்கு குரல் கொடுக்க தோட்டத் தொழிலாளர் சங்கம் (பி.எல்.சி.) உள்ளது. இதன் தலைவராக பீர்மேடு எம்.எல்.ஏ., வாழூர் சோமன் உள்ளார். ஆனால் இத்தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் இவர் செய்யவில்லை. மேலும் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து இவர் வலியுறுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் இவர் கம்பத்தில் நாளை மாலை நடைபெறும் விழாவிற்கு கலந்து கொள்ள வரும்போது லோயர்கேம்பில் தடுத்து நிறுத்துவோம் என்றார்.
மேலும்
-
பெண்கள் குளிப்பதை படம் எடுத்த 2 மாணவர்கள் கைது
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்விரோதத்தால் சுட்டுக்கொலை
-
கிறிஸ்துவ வன்னியருக்கு எம்.பி.சி., எதிர்த்த ஹிந்து அமைப்பினர் கைது
-
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 30 வரை மழை
-
தாய்க்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்த குழந்தை பலி
-
'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!