கூலி தொழிலாளி தற்கொலை

மயிலம் : மயிலம் அருகே கூலி தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தகுமார், 56; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று காலை 11:00 மணிக்கு அதே கிராம புளியந்தோப்பு பகுதியில் மரத்தில் குமார் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மயிலம் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement