அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல் பயிற்சி

--பெரியகுளம் : மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆணையம் சார்பில் பெரியகுளம் மாவட்ட மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பருவநிலை மாற்றம், உடல் நலத்திற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள், மருத்துவ கழிவுகள், மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆணையம் சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.

மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் முன்னிலை வகித்தார்.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், தேனி நலம் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார், டாக்டர்கள் மகாலட்சுமி, அஞ்சலி, திருமுருகன் பேசினர். பசுமைத் தோழர்கள் பிரியங்கா, டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் ராஜ்குமார் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.-

Advertisement