தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம்; கடை வியாபாரிகள் காலி செய்ய நோட்டீஸ்

தேவகோட்டை : தேவகோட்டை பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200 பஸ்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இட நெருக்கடியில் பயணிகள் தவித்ததால் தினசரி மார்க்கெட் செயல்படும் இடத்தையும் விரிவாக்கம் செய்து நகராட்சியினர் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்தனர்.

புது பஸ் ஸ்டாண்ட் கட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் கட்ட அரசு அனுமதி வழங்கியது.

நேற்று பஸ் ஸ்டாண்டில் கடைகள் நடத்துபவர்களுக்கும், நகராட்சி நாளங்காடியில் கடைகள் நடத்துபவர்களும் 30 நாட்களில் கடைகளை காலி செய்து நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக எங்கே மாற்றப்பட உள்ளது என்று தெரிவிக்கப்படாததால் வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement