வைத்தியநாத சுவாமி கோயிலில் வருடாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை சித்திரசபை மண்டபத்தில் வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், பிரியாவிடை, முருகன், வள்ளி தெய்வானை, விநாயகர் எழுந்தருளினர். அங்கு யாகசாலை பூஜைகளை ரகு பட்டர் தலைமையில் கோயில் பட்டர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மாலையில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. கோயில் ரத வீதியில் சுற்றி வந்த பஞ்சமூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வந்தது.

Advertisement