மெத்தை தயாரிப்பு கூடத்தில் தீ விபத்து

தேனி : தேனியில் இலவம்பஞ்சு மெத்தை தயாரிப்பு கூடத்தில் திடீரென தீ பற்றியதில் மெத்தைகள், இயந்திரங்கள் சேதமடைந்தன.

போடி நவீன்குமார் 48, என்பவருக்கு சொந்தமான இலவம்பஞ்சு மெத்தை தயாரிப்பு கூடம் தேனியில் அரண்மனைப்புதுார் விலக்கு ராஜா களத்தில் உள்ளது. இங்கு நேற்று 6 பெண்கள் உட்பட பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். . அப்போது திடீரென தீ பற்றியது. தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயை அணைக்க தேனி, ஆண்டிபட்டி, போடி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தனர். வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் பயன்படுத்தியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அருகில் இருந்த தாமரைகுளத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தீயை அணைத்தனர். தீவிபத்தால் சுற்றுப் பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து தொடர்பாக தேனி போலீசார் விசாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் நவீன்குமாருக்கு சொந்தமான போடி பஞ்சு நிறுவனத்திலும் தீ விபத்து நடந்தது குறிப்பிட தக்கது.

Advertisement